நாகர்கோவில்: குமரியில் மழை வேண்டி பேச்சிப்பாறை, பேச்சியம்மன் கோயிலில் நேற்று (ஜூலை., 9ல்) சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, திருக்கோயில் கள் நிர்வாக இணை கமிஷனர் அன்புமணி தலைமை வகித்தார்.இதில் பேச்சியம்மன் கோயி லில் தனியாக அமைக்கப்பட்ட பந்தலில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அர்ச்சர்கள் யாகம் நடத்தினர். பின்னர் சலச பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து கலசங்களின் நிறைக்கப் பட்ட புனித தண்ணீர் பேச்சிப்பாறை கால்வாயில் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஜான்தங்கம், அவைத்தலைவர் சிவகுற்றாலம், திருவட்டாறு ஒன்றியச்செயலர் ஜெயசுதர்சன், பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு செயற்பொறியாளர் வேத அருள் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படவிளக்கம்:பேச்சிப்பாறை கால்வாயில் புனித தண்ணீரைத் தெளிக்கும் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர்.