மங்கலம்பேட்டை அருகே பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2019 02:07
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் வரதராஜபெருமாள் கோவில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 7 ம் தேதி தொடங்கி, வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 7 ம் தேதி காலை 9:00 மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், 8 ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, திருவாய்மொழி சேவை, நேற்று (ஜூலை., 9ல்) சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இன்று (10ம் தேதி) சகஸ்ரநாமபாராயணம், 11ம் தேதி 109வது சுதர்சன ஹோமம், மாலை 7:30 மணிக்கு கருடசேவை, 12ம் தேதி மாலை 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 13ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு ஹோமம், மாலை 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.