ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நடந்த, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நேற்று 10ம் தேதி நிறைவு பெற்றது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா சுதர்சன யாகத்துடன் கடந்த, 8ல் துவங்கியது.
இதற்காக கோவிலில் அமைக்கப்பட்டிருந்த யாகத்தில், பல்வேறு வகையான பூஜை பொருட்கள் மூலம் யாகம் வளர்க்கப்பட்டது. நேற்று, ஐந்தாம் கால யாக பூஜையில் கும்ப ஆராதனம், தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு ஆவர்த்தி ஹோமம் நடந்தது. பின்னர், கலச புறப்பாடு நிகழ்ச்சி, மூலமூர்த்தி மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு கும்ப தீர்த்தம் செய்யப்பட்டது. காலை, 10:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் உற்சவருக்கு திருமஞ்சனம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் பட்டது. 12:30 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுதலோடு விழா நிறைவு பெற்றது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.