கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு லட்சார்ச்சனை, 1,008 சங்காபிஷேக விழா நேற்று (ஜூலை., 12ல்) துவங்கியது. இரு நாட்கள் விழா நடக்கிறது. கணபதி பூஜையுடன் துவங்கி, மகா தீபாராதனை நடந்தது. பச்சமலை மற்றும் பாரியூர் வகையறா கோவில் சிவாச் சாரியர்கள், லட்சார்ச்சனையில் பங்கேற்றனர். கடைவீதி வியாபாரிகள், மக்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக, லட்சார்ச்சனை பூஜை, இன்றும் (ஜூலை., 13ல்) நடக்கிறது.