மங்கலம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2019 02:07
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த சின்னபரூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த சின்னபரூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி காலை 9:30 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, சிறப்பு ஹோமம் இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் 11ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 7:00 மணிக்கு மஹா தீபாராதனை, காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:30 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.