பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
விருத்தாசலம்:கொளஞ்சியப்பர் கோவிலிலுள்ள சித்தர் மண்டபத்தை, வழிபாட்டு நேரங்களில் திறந்து வைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் பிராது கட்டும், பிரார்த்தனை தலமாகும். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அலுவலகத்தில் பிராது சீட்டு வாங்கி, பிரார்த் தனையை எழுதி, கட்டணம் செலுத்தி, கொளஞ்சியப்பரிடம் வைத்து பூஜை செய்வர்.பின்னர், முனியப்பர் சன்னதி எதிரிலுள்ள திரிசூலங்களில் கட்டுவர். முருகர் வேண்டுகோளுக்கிணங்க, பக்தர்களின் நியாயமான கோரிக்கையை முனியப்பர் நிறைவேற்றித் தருகிறார் என்பது பக்தர் களின் நம்பிக்கை.இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமா னோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இங்கு சித்தர் மண்டபம் என ஒன்று உள்ளது.இதில், மயிலாடுதுறை குதும்பசித்தர், பேரூர் (பரூர்) கோரக்க சித்தர், வைத்தீஸ்வரன் கோவில் தன்வந்திரி சித்தர், மதுரை சுந்தரானந்தா சித்தர், ஓட்டுக்குடி வால்மீகர் சித்தர், அழகர்மலை ராமதேவர், மணவாளநல்லுார் அகப்பேய் சித்தர், சிதம்பரம் திருமூலர் சித்தர், திருப்பரங்குன்றம் மச்சிமுனி சித்தர் உள்ளிட்ட பல்வேறு சித்தர்கள் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சித்தர் மணி மண்டபம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.ஏராளமான மருத்துவ மற்றும் வாழ்வியல் முறைகளை மக்களுக்காக கண்டறிந்து, விட்டுச் சென்றுள்ளனர். அவர் களின் வாழ்வியல் நெறிமுறைகளை மக்கள் அறிய, கோவில் நிர்வாகம் வழிபாட்டு நேரங்க ளில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.