பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கருமாபுரம் அருகேயுள்ள கன்னிமார்சுவாமி கோவில், நான்காம் ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று (ஜூலை., 13ல்) நடக்கிறது.
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், கருமாபுரம் பிரிவில், கன்னிமூலகணபதி, எட்டிமரத்து கருப்ப ராயசுவாமி, செல்லாண்டியம்மன் மற்றும் கன்னிமார்சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்காம் ஆண்டு விழா சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, இன்று காலை, 6:30 மணிக்கு கணபதி
ஹோமம், 7:30 மணிக்கு அபிஷேக பூஜை மற்றும் தீர்த்த கலச பூஜைகள் நடக்கிறது. இன்று (ஜூலை., 13ல்) காலை, 9:00 மணிக்கு வருஷாபிஷேக ஆண்டு விழா நடக்கிறது. சிறப்பு பூஜையை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.