பதிவு செய்த நாள்
13
ஜூலை
2019
02:07
எண்ணுார்: எண்ணுார், அனல்மின் நிலையம், சிவா - விஷ்ணு, பட்டரை சங்கிலிமுனீஸ்வரர் கோவில்,பிரசித்தி பெற்றது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 12ல்) நடத்தப்பட்டது.இதை முன்னிட்டு, 10ம் தேதி, கணபதி வழிபாடு, கோ பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், பாலாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
மாலை, முதல்கால பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், யாக வேள்வி, பூர்ணா ஹூதி போன்றவை நடந்தன. நேற்று முன்தினம் (ஜூலை., 11ல்), இரண்டாவது கால பூஜை, யந்திர பிரதிஷ்டை ஆகியவை நடந்தன.நேற்று (ஜூலை., 12ல்) காலை, கலச பூஜை, தத்து வார்ச்சனை, மூல மந்திரயாகம், மகாபூர்ணாஹூதி முடிந்து, கலச புறப்பாடானது.
கையிலாய வாத்தியங்கள், நாதஸ்வரம் முழங்க, ஆலய ராஜகோபுரத்தில், புனித நீர் ஊற்றப் பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, விமான கலசங்கள், பரிவார மூர்த் திகளுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.