காரைக்கால் மாங்கனி திருவிழா: நாளை திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2019 03:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பரமதத்தன் புனிதவதியார் திருக்கல்யாண உற்சவம் நாளை நடைபெறுகிறது.
காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மாங்கனித் திருவிழா இன்று (13ம் தேதி) மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
நாளை (14ம் தேதி) காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் 15ம் தேதி மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக வீதி உலா நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் மாங்கனிகள் வீசும் நிகழ்ச்சி நடக்கும். பிரசித்தி பெற்ற திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்கள் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும் சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் பாரதியார் சாலை. கன்னடியர் வீதி. பெருமாள் கோவில் வீதி. திருநள்ளாறு சாலை சந்திப்பில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாங்கனித் திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வா தலைமையில் எஸ்.பி. மாரிமுத்து. வீரவல்லபன் ஆகியோர் மாங்கனி பாதுகாப்பு குறித்து நேற்று அம்மையார் கோவில் கலையரங்கில் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.