கோவை: அய்யண்ணகவுடர் வீதியில் உள்ள சக்தி முனியப்பன் கருப்பராயன் கோவில் உற்சவத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சிறப்பு அலங்காரத்தில் சக்தி முனியப்பன் கருப்பராயன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.