பழநி:ஜூலை 16ல் சந்திரகிரகணம் ஏற்படுவதையொட்டி, பழநி முருகன் கோயிலில், இரவு 8:00 மணி ராக்கால பூஜை முடிந்தவுடன் நடைசாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் நள்ளிரவு 1:30 மணிக்கு துவங்கி, அதிகாலை 4:30மணிக்கு முடிகிறது. இதனால் பழநி முருகன் கோயிலில் இரவு 8:00 மணிக்கு ராக்கால பூஜைக்குப்பின் நடை சாத்தப்படும்.மறுநாள் (ஜூலை 17ல்) அதிகாலை 4:30 மணிக்கு சம்ப்ரோஷணம் செய்து காலை 6:00 மணிக்குசன்னதி திறக்கப்படும். தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், வழக்கமான ஆறுகால பூஜைகள் நடைபெறும்.இதேபோல திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் கோயில் ஆகிய உப கோயில் களிலும் ராக்கால பூஜைக்குபின் நடை சாத்தப்பட்டு மறுநாள் ஜூலை 17ல் வழக்கம் போல் நடைதிறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.