திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஜூலை, 16ம் தேதி, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூலை, 16 நள்ளிரவு, 1:14 மணி முதல், அதிகாலை, 4:15 மணி வரை, சந்திர கிரகணம் நடக்க உள்ளது.மேலும், அன்று காலை, ஏழுமலையான் கோவில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு, சுத்தப்படுத்தப்பட உள்ளது. எனவே, ஜூலை 16, காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரை, ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஜூலை, 16, மாலை, 7:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்படும். இதை முன்னிட்டு, ஜூலை, 16 மற்றும், 17ம் தேதிகளில், ஆர்ஜித சேவைகள் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்று தர்ம தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் குறிப்பிட்ட அளவில் அனுமதிக்கப்படுவர்.ஜூலை, 17ல், அங்கபிரதட்சணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை, 17, காலை, 5:00 மணிக்கு, கோவிலை திறந்து சுத்தம் செய்யப்பட்ட பின், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜூலை, 16ம் தேதி மாலையுடன், காத்திருப்பு அறைகள், அன்னதான கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்படும்.