பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், அன்னதான திட்டம் துவங்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் மலை மேல் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.இக்கோவில், கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படு கிறது.
மேலும், மார்கழி மாதம் முழுவதும் வேலாயுதசுவாமிக்கு, சிவன், பார்வதி, அர்த்தநாரீஸ்வரர், வெங்கடாசலபதி, வேடன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து பூஜை செய்வதால், பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும், கந்த சஷ்டி மற்றும் தைப்பூசத் தேர் திருவிழா சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவில் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகில் உள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் தினமும் அன்னதான திட்டத் தின் கீழ், 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், பொன்மலை வேலாயு தசுவாமி கோவிலில் அன்னதான திட்டம் இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. இக்கோவிலில் அன்னதான திட்டம் துவங்கினால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு, மாலை நேரங்களில் நடக்கும் பூஜையை தரிசனம் செய்துவிட்டு கிளம்புவதற்கு வசதியாக இருக்கும்.மேலும், இக்கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பதோடு, உண்டி யல் காணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு, இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.