பொள்ளாச்சி:பொள்ளாச்சி சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை., 14ல்) சிறப்பு வழிபாடு நடந்தது.
பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரத தினத்தை முன்னி ட்டு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு ஆராதனைகள் நடந்தன. பிரதோஷ காலமான நேற்று மாலை, 4:30 - 6:00 மணியளவில், பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவணாம்பாளையம் ஈஸ்வரன் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், தேவம்பாடி அமணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி வாகனத்தின் மீது சிவன் மற்றும் அம்மன் பவனி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.