விழுப்புரத்தில் கைலாசநாதர் கோவிலில் திருவாசக முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 03:07
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா நடை பெற்றது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் திருவாசக முற்றோதல் பெருவிழாவை யொட்டி, நேற்று முன்தினம் (ஜூலை., 13ல்) மாலை 5.00 மணிக்கு பழைய பஸ் நிலையம் ஆதிவாலீஸ்வர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாச கர் வீதியுலா ஊர்வலமாக, கைலாசநாதர் கோவில் வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று (ஜூலை., 14ல்) காலை 6.00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சிவதாமோதரன் தலைமையிலான குழுவினரின், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிவ பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு, சிவபெருமானின் திருவாசக பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.