பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
நகரி:திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி விழாவில், 2,500 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.
சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, கிருஷ்ணாராமாபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 5ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி விழா துவங்கியது.
கடந்த, 12ம் தேதி, அர்ச்சுனன் தபசு, நேற்று (ஜூலை., 14ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ் ச்சி நடந்தது.மாலையில் நடந்த தீ மிதி விழாவில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.