பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர், ராஜன் நகர் அடுத்த காந்திநகர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த, 12ல், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அன்று காலை, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 13ல், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்), இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணியளவில் கணபதி யாகம் மற்றும் யாகசாலை பூஜை செய்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் மாகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.