பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம், குருநாதசுவாமி கோவில் ஆடிப்பெரு தேர்த்திருவிழாவிற்காக நாளை (ஜூலை., 17ல்) இரவு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. வரும், 24 ல், கொடியேற்றுதல், 31ல் இருந்து வன பூஜை நடைபெறுகிறது. 7 ல், ஆடிப்பெரு தேர்த்திருவிழா மற்றும் மாட்டு சந்தை, குதிரை சந்தை நடைபெறும். அன்று காலை, சுவாமிகள் மகமேருதேர்களில் வனத்திற்கு செல்லும்.
அன்று சுவாமிகள், வனத்தில் தங்கி சிறப்பு பூஜை நடைபெறும். இரவு, 11:00 மணிக்குமேல் சுவாமி கள் மகமேரு தேர்களில் புறப்பட்டு விடியற்காலை புதுப்பாளையம் மண்டப கோவில் வந்து சேரும். வரும், 10 வரை திருவிழா நடைபெறும்.