பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
ஈரோடு: பவானி வட்டம், ஜம்பை பெரிய வடமலைபாளையத்தில் எழுந்தருளியுள்ள, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக வரும், 19ல் தொடங்கி, 21 நாட்கள் லட்சார்ச்சனை, தன்வந்தரி ஹோமம், சுதர்ஸன ஹோமம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வரும், 19ல் காலை விஷ்வக்சேனர் ஆராதனை, லட்சார்ச்சனை துவக்கம், 20ல், காலை, 8:00 மணி க்கு விசேஷ திருமஞ்சனம், 21ல், தன்வந்திரி ஹோமம், மஹா தீபாராதனை, மதியம், 3:00 மணி க்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, விழா குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.