பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தின், 46வது ஆண்டு தேர் திரு விழா, கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நடந்து வந்தன. மேலும், மாலையில், ஆலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்து வந்தது. தேர்த்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) காலை, 8:00 மணிக்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர், லாரன்ஸ்பயஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது.
மாலை, 7:00 மணிக்கு வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னை யின் பெரிய தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங் களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டு தல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்தி க்கடன் செலுத்தினர். இதையொட்டி, ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.