பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால பூஜைகளில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம் பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பலிபீடத்தில் உப்பு, மிளகு செலுத்தியும்; அம்மனுக்கு கூழ் படைத்தும் வழிபாடு செய்தனர்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று (ஜூலை., 19ல்) காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.
மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர் ந்து, மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், மாங்கல்யபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். மழை பொழிய வேண்டும் என்றும்; குடும்பம் மகிழ்ச்சி யாய் வாழ வழி செய்ய வேண்டும் என, பக்தர்கள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து வழிபட்ட னர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகையான அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் வளையல், மஞ்சள், குங்குமம், சுவாமி படம் வழங்கப்பட்டன.சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.
பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பக்தர்கள் தெய்வகுளத்தில் தீர்த்தம் எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.
வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 19ல்) காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜூலை., 19,) அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது.