பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
உடுமலை:ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி, அம்மனின் அருளை பெற, உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.மக்களின் காவல் தெய்வமாய், கருமாரியாய், காளியாய், முத்து மாரியாய், அங்காள பரமேஸ்வரியாய், அருள் புரியும் அம்பாளின் மாதமாகவே அழைக்கப்படுகிறது
ஆடி மாதம். அம்மனின் மனம் குளிர்ந்து, கடைக்கண் பார்வையால், பக்தர்களை காத்தருள, ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.நேற்று (ஜூலை., 19ல்) ஆடி முதல் வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரளாக ச்சென்று வழிபட்டனர்.
பெண்கள் விரதமிருந்து வேண்டுதல்களுக்கான நேர்த்திக்கடன்களை இம்மாதத்தில் தான் செலுத்துகின்றனர்.உடுமலை மாரியம்மன் கோவிலில், காலை, 11:00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் உச்சிகாலபூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாரா தனை நடைபெற்றது.பக்தர்கள் பலரும், வேண்டுதலுக்காக, கூழ் படைத்து வழிபட்டனர். சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசித்தனர். கல்பனா ரோடு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.தளி ரோடு காமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில், சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை தலைகொண்ட அம்மன் கோவில்களில், காலை, 7:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், காலை, 7:00 மணி முதல், பூமிலட்சுமி மற்றும் ஆண்டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி முதல் வெள்ளியில், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் பெண்களின் கூட்டம் அதிகரித்திருந்தது.