பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
12:07
காரமடை: காரமடையில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன பெயின்ட் பயன்படுத்தா மல், இயற்கைக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ண வண்ண வித்தியாசமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.விநாயகர் சதுர்த்தி விழா செப்., 2 அன்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் மாவட்டம்முழுக்க பல ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
அதற்காக அந்தந்த பகுதிகளிலேயே விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் சூடுபிடித்துள் ளன.அரசு உத்தரவு படி, ரசாயன கலவை இல்லாத சிலைகளை மட்டுமே தயாரிக்கவும், விற் பனையும் செய்ய வேண்டும். இயற்கையான மூலப்பொருட்களை, கொண்டு தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.காரணம் கொள்முதல் செலவு அதிகம்.
ஆனால் இயற்கையை நேசிக்கும் தயாரிப்பாளர்கள் இயற்கையான சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பொருட்களை பயன்படுத்தியே விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர். கோவை மாவட்டம் காரமடை காந்தி நகர் பகுதியில், காகித கூல், கிழங்குமாவு, மூங்கில் தப்பை ஆகியவை கலந்த இயற்கை, பொருட்களோடு விநாயகர் சிலை தயாராகி வருகின்றன.
இது குறித்து சிலை தயாரிப்பாளர் குமார் கூறுகையில்,”நாங்கள் கடலுார் மாவட்டம் கூத்த பாக்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், கொலு பொம்மைகள், கிருஷ்ணர் பொம்மை மற்றும் நவராத்திரிக்கு தேவையான அம்மன் துர்கை அம்பாள் பொம்மைகளை செய்து விற்பனை செய்கிறோம்.கைவினைப் பொருட்கள் தயாரிக்க, சென்னையில் உள்ள தொழில் வணிகத் துறையின் மண்டல இயக்குனரின் கையொப்ப சான்றிதழ் பெற்று, தற்போது விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம்.
கிழங்கு மாவு, காகித கூல் மற்றும் மூங்கில் மரத்தினால் விநாயகர் சிலை தயாரிக்கிறோம். 2 அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட சிலைகள், மூன்றாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.இந்த ஆண்டு சிவனின் உருவத்தில் விநாயகர் - தலையில் பிறையுடன், கங்காதேவி, கழுத்தில் பாம்பு மாலையுடன். பாகுபலி விநாயகர், கையில் தபேலா வுடன் தலைக்குமேல் கோலாட்டம் ,சிங்க விநாயகர் மற்றும் ராஜ விநாயகர் என 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது என்றார்.