பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
12:07
கோவை: கோவை, ராம்நகர், ராமர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ’பாடி மகிழ் வோம் பகவான் நாமம்’ என்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ’பாடி மகிழ்வோம் பகவான் நாமம்’ என்ற ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று (ஜூலை., 21ல்) நடந்தது.
இதில், ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ், இசையுடன் கூடிய ஆன்மிக சொற்பொழி வாற்றினார். நேற்றைய நிகழ்ச்சியில் (ஜூலை., 21ல்), ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் பேசுகையில், ”கடுமை யான யாகங்கள் செய்தால் மட்டுமே, இறைவனை அடையலாம் என அனைவரும் நினைத்து கொண்டுள்ளனர். இறைவனின் நாமம் சொன்னாலே, எளிதாக இறைவனை அடையலாம்.
இறைவனுக்கு பணம் படைத்தவன், உயர்ந்த ஜாதி, வீரம் மிக்கவன், பலவான் போன்ற பாகு பாடெல்லாம் கிடையாது. முக்தியை அடைய, நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், முழுமனதுடன் இறைவனை அடைய வேண்டும்,” என்றார்.இந்நிகழ்ச்சியில், ஏராளமான ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டனர்.