பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
02:07
குளித்தலை: வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில், ஆடி விழாவையொட்டி, 1,560 குத்து விளக்கு பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்.,, வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன்கோவில் முன், நேற்று (ஜூலை., 21ல்) மாலை, 5:00 மணியளவில் ஆடி, 5ம் நாளை முன்னிட்டு, 1,560 குத்து விளக்கு பூஜை நடந்தது.
உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், மாங்கல்ய பூஜை, குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்கவேண்டி பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு சந்தக காப்பு அலங்காரம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தோகைமலை, கழுகூர், கள்ளை, பாதிரிப்பட்டி, பொருந்தலூர், நாகனூர், கல்லடை பகுதி பெண்கள் கலந்துகொண்டனர்.