கம்மாபுரம் அருகே மும்முடிசோழகன் கோவிலில் 26ம் தேதி செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2019 12:07
கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் செடல்முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 26ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.
இதனையொட்டி, கடந்த 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து, காத்தவராயன் கதைப்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 26ம் தேதி பகல் 12:00 மணிக்கு செடல் உற்சவம் விழாவும், மாலை 6:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.