பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஸ்ரீவராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு யாகம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதியில் பஞ்சமியாகம் நடந்தது. விழாவையொட்டி மாலை 6:00 மணிக்கு ஸ்ரீவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு யாகம், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கலச நீரால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.