பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
01:07
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், திருநங்கைகளின் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நடந்தது. குமாரபாளையம், மேற்கு காலனியில், திருநங்கை களின் சார்பில் ஆடி மாதம் சமயபுரம் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா, கடந்த, 19ல் துவங்கியது.
இதையடுத்து காவிரி ஆற்றிலிருந்து பம்பை, உடுக்கை, தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க திருநங்கைகளின் கரகாட்டம், நையாண்டி மேளம், நவசக்தி வேடம், மாகாளி வேடம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மூன்றாம் நாள் விழாவாக மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர் களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் ஊற்றுதல் நடந்தது. ஏற்பாடுகளை திருநங்கைகள் சங்க தலைவி மாதம்மாள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.