ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருடபிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2012 10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி , ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7மணிக்கு வெள்ளிக்கிழமை குறட்டில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், வடபத்ராயி, ஸ்ரீதேவி,பூதேவி, 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு புது வஸ்திரம் சார்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தன . தொடர்ந்து ஸ்தானிகம் ரமேஷ் பஞ்சாகம் வாசித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.