பெரியகுளம் : பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆனித்திருவிழா ஜூலை 17 ல் முடிந்தது.
நேற்று (ஜூலை., 23ல்) மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், தீர்த்தொட்டியிலிருந்து பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அண்ணாதுரை, மண்டகபடிதாரர்கள், பூஜாரி கள் செய்தனர்.