காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மஞ்சள் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2019 01:07
காரைக்குடி: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடியில் அம்மனை குளிர்விப்ப தற்காக ஒவ்வொரு ஆண்டும் பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது.இதற்காக பெண்கள் முந்தைய நாளிலிருந்தே அம்மியில் மஞ்சளை அரைக்க தொடங்குகின்றனர்.
மொத்த மஞ்சளும் கையால் அரைக்கப்பட்ட நிலையில் ஆடி முதல் வெள்ளியன்றுஅம்மனுக்கு பச்ச மஞ்சள் அபிஷேகம் நடப்பது வழக்கம்.
முத்துமாரியம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, 1,008 சங்காபிஷேகமும், வளையல் அலங்காரம், கோமாதா பூஜை நடப்பது வழக்கம்.