பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
11:07
மேட்டுப்பாளையம்: மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரமடையை அடுத்த மருதுாரில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது.
கருவறையில் ராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிக்கிறார். இவருக்கு ஜெயமங்களஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் வாரத்தில், ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதன் படி ஆடி முதல் வாரத்தில், ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.இவ்விழாவில் புலவர் அரங்கசாமியின், வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லுார் மற்றும் சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடந்தது. இவ்வழிபாட்டில் காரமடை, வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தேக்கம்பட்டி, புஜங்கனுார், தோலம்பாளையம், குன்னுார், கோத்தகிரி ஆகிய ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆஞ்சநேயா அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.