பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவத்தையொட்டி வைக்கப்பட்ட, ஐந்து சிறப்பு உண்டியல்களில், 1 கோடியே, 38 லட்சத்து, 16 ஆயிரத்து, 319 ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை 1ம் தேதி முதல் நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை காண, தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த, கோவில் வளாகத்திற்குள் ஏற்கனவே, 13 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு உண்டியல் மட்டும் நிரம்பியது. அதில் உள்ள காணிக்கை, 17ம் தேதி எண்ணப்பட்டது. அதில், 28 லட்சத்து, 77 ஆயிரத்து, 907 ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்தது. அத்தி வரதர் வைபவத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறப்பு உண்டியல்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 1 கோடியே, 38 லட்சத்து, 16 ஆயிரத்து, 319 ரூபாயும், 22 கிராம் தங்கமும், 714 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன.