பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
மதுரை: ஆடி அமாவாசையை ஒட்டி, மதுரை - ராமேஸ்வரம் இடையே, ஜூலை, 30ல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.மதுரையில் அன்று இரவு, 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 3:20 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில், 31ம் தேதி இரவு, 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு மதுரை வரும். இதில், முன்பதிவு இல்லாத, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும்.