பதிவு செய்த நாள்
24
மார்
2012
10:03
திசையன்விளை : அரசூர் பூச்சிக்காடு கலியுக வரத சாஸ்தா கோயிலில் நாளை (25ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அரசூர் பூச்சிக்காடு கருமிளகை கரும்பயிராக்கி, கரும்பயிரை கருமிளகாக்கிய பூரண புஷ்கலை சமேத கலியுகவரத சாஸ்தா கோயில் நூதன ஆலய, விமான, சிலா பிம்பஸ்தா ஜீர்ணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (24ம் தேதி) துவங்கி நாளை (25ம் தேதி) வரை இரண்டு நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மங்கள இசை, விக்னேஸ்வர, தீபலெட்சுமி, புண்ணியாகஹாசன, கோ, பஞ்ச கவ்ய பூஜைகள், அனுக்ஞை, மஹா கணபதி, சுதர்சன, மஹாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், காரிசாஸ்தா கோயிலில் இருந்து கும்பம் கோயிலுக்கு வந்தடைதல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், சுவாமி யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்ப்பணம் ஆகியன நடக்கிறது.25ம் தேதி வேதபாராயணம், வேதிகார்ச்சனை, 2ம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், கடம்புறப்பாடு, விமானம் மற்றும் கலியுக வரத சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், பிரசன்ன பூஜை, மகேஸ்வர பூஜை, அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை செம்பொன்விளை குணசேகர், குமாரபுரம் பச்சித்துரை செய்து வருகின்றனர்.