பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
ஈரோடு: ஈரோடு, கோட்டை முத்துக்குமாரசாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
ஈரோடு, கோட்டை சின்னப் பாவடியில் உள்ள முத்துக்குமாரசாமி கோவில் பூந்தேர்த்திருவிழா கடந்த, 21ல் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 22ல் விளக்கு பூஜை, 23ல் படைக்கலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூலை., 24ல்) பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல், சிறப்பு பூஜை நடந்தது. கோட்டை பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை, 4:00 மணி க்கு பூந்தேர் ஊர்வலம் நடக்கிறது.