பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் கோ பூஜை வழிபாட்டிற்கு பயன்படுத்தி வந்த, வயதான மாடு நேற்று (ஜூலை., 24ல்) இறந்தது. சென்னிமலை முருகன் கோவிலில், 11 ஆண்டு களாக கோ பூஜைக்கு, மலை கோவில் மேல் தனியாக பசு மாடு வைத்திருந்தனர்.
இந்த மாடு மிகவும் வயதாகி விட்டதால் நோயுற்று இருந்தது. கோபூஜைக்கு புதிய மாடு கொண்டு வந்து விட்டு, பழைய மாட்டை ஒரு ஆண்டுக்கு முன்பு மலை கோவிலில் இருந்து, அடிவாரத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு வந்து, தினமும் கால்நடை உதவி மருத்துவர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். வயது முதிர்வின் காரணமாக பசுமாடு நேற்று (ஜூலை., 24ல்) இறந்து விட்டது. கால்நடை உதவி மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பின், பொக்லைன் இயந்திரம் கொண்டு கோவில் நிலத்தில் பெரிய குழி வெட்டி, இறந்த மாட்டிற்கு சிறப்பு பூஜை செய்து அடக்கம் செய்தனர்.