திருவாடானை : தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா ஆலய திரு விழா நேற்று (ஜூலை., 25ல்) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக பாதிரியார் சாமிநாதன் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 31ல் நவநாள் திருப்பலியும், அன்று இரவு புனித இஞ்ஞாசியார் தேர்பவனியும் நடக்கிறது.மறுநாள் காலை நற்கருணை பவனியும், அன்று இரவு செங்கோல் மாதா தேர்பவனியும், ஆக. 2ல் கொடியிறக்கமும்நடைபெறும்.