சாத்துார் : சாத்துார் உப்பத்துார் சங்கராபுரம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஜூலை., 25ல்) தேர்பவனி நடந்தது. இவ்ஆலய விழா கடந்த ஜூலை 16ல் கொடியேற் றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாள் தோறும் புனித சந்தியாகப்பர் திருவுருவம் சப்பரம் பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஜூலை 24 மற்றும் 25ல் நடந்தது. மிக்கால், லுார்து மேரி, புனித சந்தியாகப்பர் சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் வீற்றிருக்க முக்கியவீதிகள் வழியாக வலம் வந்தது. பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பாதிரியார் போதகர்மைக் கேல்ராஜ் சிறப்பு திருப்பலிபூஜைகள் செய்தார். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.