பதிவு செய்த நாள்
28
ஜூலை
2019
01:07
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, ஆக.,?ல் நடக்கிறது. முன்னதாக, 6ல் மாலை, 4:00 மணிக்கு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் வேல் எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது. ஆக.,7ல் காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைபவம், 11:00 மணிக்கு, சக்தி பஞ்சமுக கணபதி, கன்னிமார் மற்றும் ஏரி கருப்பராயனுக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, முனியப்பசாமிக்கு அசைவ படையல் பூஜை நடக்கிறது. ஏரி கருப்பராயன் உற்சவர் திருவீதி உலா, மாலையில் நடக்கிறது. ஆக.,8ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.