அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் கடைவீதி அருகேயுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு சொற்பொழிவு மற்றும் இரவில் தெருக்கூத்து் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி உற்சவமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.