சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது.சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு சொற்பொழிவு நடந்தது. 23ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம் நடந்தது.அம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கிழக்கு சன்னதியில் பகல் 1 மணிக்கு அம்மன் தேர் நிறுத்தப்பட்டு, நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் சார்பில் தீட்சிதர்கள் மாரியம்மனுக்கு வஸ்திரம் உள்ளிட்ட வரிசைகள் எடுத்து வந்து சிறப்பு வழிப்பாடு செய்தனர். ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று (29ம் தேதி) காலை 5 மணிக்கு பக்தர்கள் அலகு போடுதல், காவடி எடுத்தல் நடக்கிறது. 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்புக் கட்டுதல், 10 மணிக்கு சோதனை கரகம், அலகு தரிசனம், மதியம் 2 மணிக்கு அக்கினி சட்டி எடுத்தல் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.