பச்சரிசி – 2 கப் பொடித்த வெல்லம் – ஒரு கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு வடிகட்டி நிழலில் உலர வைக்கவும். முக்கால் பதம் உலர்ந்ததும் மிக்சியில் மாவாக அரைத்து சல்லடையில் சலிக்கவும். வெல்லத்தை கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகுபதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து இறக்கி, மாவைத் தூவி நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். இது தான் அதிரச மாவு.
அடிகனமான வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய வைத்து, அதிரச மாவை உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். காரைக்கால் அருகிலுள்ள திருமலைராயன் பட்டணத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஆயிரங்காளி அன்னை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை, மூன்று நாள் அம்மனை எழுந்தருளச் செய்து ஆயிரம் அதிரசங்கள் படைத்து வழிபடுகின்றனர்.