பொருள்: யாருடைய மனம் எப்போதும் கடவுள் சிந்தனையில் ஈடுபடுகிறதோ அவர்கள் ஞானம் அடைந்தவர்களாகவும், பாவம் இல்லாதவர்களாகவும் இருப்பர். அவர்கள் மீண்டும் பூமியில் பிறவி எடுக்காத முத்திநிலையை அடைவர். இத்தகையவர்கள் ஞானிகளாக இருப்பதால் எல்லா உயிர்களையும் சமமாகவே கருதுவர். கல்வியறிவும், பணிவும் கொண்ட அந்தணர், பசுக்கள், யானை, நாய், சண்டாளன் என்று எல்லா உயிர்களும் அவர்களுக்கு ஒன்றே. அதாவது உயிர்களில் எல்லாம் ஆத்மா வடிவில் இருக்கும் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்திருப்பர்.