* உணவு, நீர் தரும் பூமித்தாயை காப்போம். மண், நீர், காற்று, மலையை காப்பது நம் கடமை. * மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி யாருக்கு இருக்கிறதோ அவரை வெற்றி தேடி வரும். * அன்பால் மனம் தூய்மையாகும்.எதிர்பார்ப்பு இல்லாத அன்பு உலகையே வசப்படுத்தும். * சோர்வு நீக்கி தடைபட்ட செயல்களை துரிதப்படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே உண்டு. * மனிதன் முழுமையான வளர்ச்சி பெற உதவுகிறது தியானம். இதை தினமும் செய். * மனம், புத்திக்கு எட்டாதவர் கடவுள். அருள் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும். * ஆசைகளை கைவிடுங்கள். சுயநலமின்றி உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை, அரவணைக்க முயலுங்கள். * கவுரவம் என்பது புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வதில் இருக்கிறது. * அறிவு, உணர்ச்சி, குணம் இவற்றால் நாம் வேறுபடுகிறோம். இதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் உருவாயின. * நாம் யார், எதற்காக பூமிக்கு வந்தோம் என்பதை அறியும் போது மனக் குழப்பம், குறைபாடு, ஏக்கம் அனைத்தும் தீர்ந்து தெய்வீகநிலைக்கு உயர்கிறோம். * செவி கொடுத்து கேட்டால் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, துணிவைப் பாராட்டிக் கடவுள் சிரிப்பது காதில் ஒலிக்கும். * பிறரது மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பமும், பிறரது துன்பத்தில் உண்மையான பங்கும் கொள்ள வேண்டும். * உடலுக்குள் உள்ள உறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவற்றின் இயக்கத்தை உணர்கிறோம். இருதயம் ரத்தத்தை ஓட வைக்கிறது. குடல் உணவை ஜீரணிக்கிறது. இதைப் போல கடவுளும் நம்முள் இருந்து இயக்குகிறார். -அழைக்கிறார் சின்மயானந்தர்