விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - மரக்காணம் சாலையில், சுமார் 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆலங்குப்பம், இங்கிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முன்னூர். "முன்னூற்று மங்கலம் என்று புராணங்களும் சரித்திரமும் போற்றும் இந்தத் தலத்தில், சோழ மன்னன் குலோத்துங்கனுக்கு நடனக் கோலம் காட்டி அருளியதால், ஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்கிறார் ஈசன். அம்பாளின் திருநாமம் பிரஹன்நாயகி, பூவுலகில் இருந்து சொர்க்கம் செல்ல பாலமாகத் திகழும் தலம் இது என்பது ஐதிகம். சித்தர்கள் சூட்சுமமாக உலாவரும் இந்தத் தலத்தில் மனக்குறைகளைக் கூறி பிரார்த்தித்தால், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கான தீர்வு நம் கனவில் அசரீரியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!