ஒவ்வொரு மலருக்கும் ஒரு பலன் உண்டு என்கின்றன, சைவ ஆகமங்கள். அல்லி, மல்லிகை மலர் ஆகியவை மகிழ்ச்சி தரும். அரளி, சம்பங்கி ஆபத்திலிருந்து காப்பாற்றும், சாமந்தி வியாபாரம் பெருக்கும். பிச்சிப்பூ குழந்தைகளின் குறை நீக்கும். மனோரஞ்சிதம், நீலோத்பவம், சங்கு புஷ்பம் ஆகியவை நிம்மதி அருளும், சண்பகம் மங்கலம் தரும்; தாமரை ஞானம் நல்கும், நந்தியாவட்டை நலவாழ்வு தரும். சூரியகாந்திப் பூ காரிய ஸித்தி தரும்; முருங்கைப் பூ வாகன விருத்தி; பவளமல்லி வெளிநாட்டு பயணம் அருளும். அகத்திப் பூ தீய கனவு நீக்கும்; மாம்பூ கடன் தீர்க்கும். தூதுவளை பூ பயண வெற்றி தரும். செம்பருத்திப் பூ சவுந்தர்யம் அளிக்கும். மகிழம்பூ, எதிரிகளை விலகச் செய்யும். அசோகப் பூ தடைகளை நீக்கும். மந்தாரை மன வலிமை தரும். பன்னீர் பூ வெற்றியளிக்கும். வெப்பம் பூ வேதனைகளை அகற்றும்.