வரதராஜப்பெருமாள் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 11:07
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் மூன்று நாட்கள் நடந்த திருபவித்ர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு பவித்ர மாலை வழங்கப்பட்டது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் மூன்று நாட்கள் நடக்கும் திருபவித்ர உற்ஸவம் மஹா சாந்தி ேஹாமம் பூஜையுடன் துவங்கியது. மஹா பூர்ண ஹூதியும், கும்பம் புறப்பாடு, திருப்பாவாடை தரிசனம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடந்தது. ஏராளமானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கண்ணன், பாபு , குழுவினர் செய்திருந்தனர்.