ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 11:07
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான இன்று ஐந்து கருடசேவை நடக்கிறது. ஜூலை 27 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் நடந்தது.
இதை தொடர்ந்து ஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருள, பெரியபெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் மற்றும் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவையை முன்னிட்டு பெரிய அன்னவாகனத்தில் ஆண்டாள், சின்ன அன்னவாகனத்தில் பெரியாழ்வாரும், கருட வாகனங்களில் ஐந்து பெருமாள்களும் எழுந்தருள மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளை சுற்றி வருவர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள் செய்து வருகின்றனர்.