பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
03:07
சேலம்: சேலத்தில், அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம் இன்று (ஜூலை., 31ல்) தொடங்கி, ஆக., 6 வரை நடக்கிறது.
இதுகுறித்து, சேலம், பிரம்ம குமாரி மகேஸ்வரி கூறியதாவது: சேலத்தில், அமர்நாத் பனி லிங்கம், 12 ஜோதிர்லிங்கத்தை, ஆக., 1 முதல், 6 வரை, நேரில் தரிசனம் செய்யலாம். புது பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள, பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடக்கும் ஜோதிர் லிங்க வைபவத்தை, தினமும் காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை பார்க்கலாம்.
மாலையில், நவதேவிகளின் தத்ரூப காட்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதற்கான தொடக்க விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இலவசமாக, தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை, சூரமங்கலம், முல்லைநகர், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் செய்து வருகிறது. தகவலுக்கு, 97912 - 08204 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.